போராட்டத்தின் வடிவங்களும் விளைவுகளும்

போராட்டத்தின் வடிவங்களும் விளைவுகளும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி ஜாக்டோ-ஜீயோ அமைப்பை சார்ந்த அரசு ஊழியர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 25ம் தேதி அதாவது நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்திரவிட்டு வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா? எங்கள் பிள்ளைகளின் படிப்பு என்னாவது?" என்று புலம்பு அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீக்கிவிட்டு படித்த இளைஞர்களை பணியில் அமர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை திட்டமிட்டபடி மாவட்ட அளவில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், 28ம் தேதி நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி போராட்டத்தின் வடிவங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.