போலியான காங்கிரஸ் - நிர்மலா சீதாராமன்

போலியான காங்கிரஸ் - நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் கூறும் ஒவ்வொரு பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் உண்மைத் தகவல்களுடன் உரிய பதிலடியை கொடுத்து வருகிறோம். அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், அடிப்படையற்ற கருத்துகளை கூறுவதில் பெயர் பெற்றவர். அக்கட்சியினர் முழுவதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடாகவே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். 

பாஜகவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதுடன், அதற்கு ஆதாரமாக போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களையும் வெளியிடுகிறது காங்கிரஸ் கட்சி, இதனால் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.