போலி செய்திகளால் மக்களை திசைதிருப்பும் ஊடகங்கள்

போலி செய்திகளால் மக்களை திசைதிருப்பும் ஊடகங்கள்

மற்ற மதத்தினரின் எந்த செயலையும் நேர்மறையாகவும், இந்துக்கள் செய்யும் எந்த செயலையும் எதிர்மறையாகவும் பார்க்கும் புதுவிதமான காமாலை நோய் ஊடகங்களுக்கு வந்து வெகு காலமாய் நோய் முற்றியும் விட்டது. இந்த நோயை தங்களை நம்பும் மக்களுக்கும் பரப்புவதை இந்த ஊடகங்கள் முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கின்றன.

வேண்டாத மருமகள் கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பது போல், இந்துக்கள் என்ன செய்தாலும் குற்றம் என்று பரப்புவதே இவர்களது வாடிக்கை. இப்போது சபரிமலை விஷயத்தில் கேரள அரசின் மக்கள் விரோத மனப்பான்மைக்கு சாமர வீசுவதை சரியாக செய்கின்றன இந்த ஊடகங்கள். 

இளம் பெண்களை செய்தியாளர்கள் என்ற பெயரில் சபரிமலைக்கு அனுப்புவது, பக்தர்களை பிரிவினைவாதிகள் போலவும், ஜனநாயக விரோதிகள் போலவும் சித்தரிப்பது போன்றவற்றை தொடந்து செய்து வருகின்றன இந்த ஊடகங்கள். இதில் ND TV நேற்று தன் கம்யூனிச விசுவாசத்தை பறைசாற்றிக்கொள்ள ஒரு காரியம் செய்துள்ளது. அது தான் கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தேலின்கெரி இருமுடியில்லாமல் பதிநேட்டாம் படியை ஏறினார் என்பது. கேரள அரசால் அமர்த்தப்பட்ட ஒரு தேவசம் போர்டு உறுப்பினர் திரித்து வெளியிட்ட வீடியோவை இதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை என்று வீடியோ ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. பக்தர்கள் சார்பாக தேவசம் போர்டில் இருக்கும் வேறு நல்ல உறுப்பினர்கள் இந்த ஆதாரங்களை வெளி கொண்டு வந்துவிட்டார்கள்.  இது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக இளம் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

திருதேலின்கெரி இருமுடியோடு பதினெட்டாம் படியை ஏற முற்பட்ட நிலையில், கொந்தளிக்கும் பக்தர்களிடம் அமைதியாக இருக்கும் படி பேசுமாறு போலீசார் வற்புறுத்தியுள்ளனர். அவரும், தன் இருமுடியை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு மைக்கை வாங்கி பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்து விட்டு, மீண்டும் இருமுடியை தன் நண்பரிடமிருந்து வாங்கிக்கொண்டு பதினெட்டாம் படியை ஏறுகிறார். ஆனால், அவர் இருமுடியில்லாமல் பதினெட்டாம் படியை ஏறியதாக மக்கள் மத்தியில் அவதூறு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

அமைதியை விரும்பும் ஆர்.எஸ்.எஸ்காரர்களிடம் எதை சொன்னால் செய்வார்கள் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பின்னர், அவர்கள் கையை வைத்தே அவர்கள் கண்ணையே குத்தும் நயவஞ்சகம் இது.  சபரிமலை விஷயத்தில் போலி செய்திகளை வெளியிட ND TVக்கு பயமில்லாமல் இருக்கலாம். காரணம், கம்யூனிச பிரசார ஊடகமான அவர்களுக்கு சபரிமலையில் இருப்பது தெய்வம், அது தன் சக்தியை காட்டிவிடும் என்ற நம்பிக்கை கிடையாது. ஆனால், பக்தர்களோ, இந்து அமைப்பினரோ அவ்வாறு செய்யமாட்டார்கள், ஏனென்றால், அது தெய்வம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.