மகளே...உன் நினைவாக!

மகளே...உன் நினைவாக!

பிரபல  பின்னணி பாடகி சித்ராவிற்கு பல ஆண்டுகள் குழந்தையில்லாமலிருந்து பின்னர் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நந்தனா என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார் சித்ரா. கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி அந்த குழந்தை இறந்து விட்டாள். அவள் நினைவாக பல சமூக நலப்பணிகளை செய்து வரும் சித்ரா கேரள மாநிலம் பாருமுலா வில் உள்ள சர்வ தேச புற்றுநோய் மைய மருத்துவமனையில் மகள் நினைவாக கீமோதெரபி சிகிச்சை மையத்தை கட்டிக்கொடுத்துள்ளார். 

இதன் தொடக்க விழாவில் பேசிய சித்ரா மகள் நினைவால் கண் கலங்கினார்.