மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் நாட்டில் பயங்கரவாதிகளின் கரங்கள் வலுப்படும்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் நாட்டில் பயங்கரவாதிகளின் கரங்கள் வலுப்படும்

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா செய்த நலத்திட்டங்களால்தான் பொது மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் திமுக தலைவர், தனது எஜமானரை (ராகுல் காந்தி) பிரதமராக முன்மொழிந்தார். இதை பொது மக்களோ, கூட்டணிக் கட்சிகளோ விரும்பவில்லை. ஏனென்றால், அங்குள்ள ஒவ்வொரு கூட்டணிக் கட்சியினருக்கும் பிரதமர் ஆசை உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதியமைச்சராக (.சிதம்பரம்) இருந்தார். அதைப் பயன்படுத்தி அவரது மகன் தேசத்தைக் கொள்ளை அடித்தார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், இதுபோன்று நடந்தது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தலுக்காக செலவு செய்கின்றனர்.

உங்கள் காவலாளியாக நான் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுத்தனம் செய்தாலும் அவர்கள் இந்தக் காவலாளியால் பிடிக்கப்படுவர். நான் தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற நினைக்கிறேன். எனவே எதிர்க்கட்சிகளின் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இலங்கை, தமிழ் சகோதரர்களின் வளத்துக்காக தொடர்ந்து பணியாற்றவேண்டும்.

இங்குள்ள வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். காங்கிஸும், திமுகவும் தேசத்துக்கு எதிரானவர்கள். இவர்களுகு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

போடிமதுரை அகல ரயில்பாதைப் பணிகள் விரைவாக நடக்கின்றன. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தேனி மக்கள் அதிகம் பயன் அடைவார்கள். ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா மூலம் இம்மாவட்டம் வளம் பெறும். தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் பலன் பெற்றுள்ளனர். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்காக அதிகரித்துள்ளோம். வைகை நதியை கங்கை நதிபோல் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காவலாளியாக நிற்பேன்:

கடினமான நேரங்களில் உங்களுடன் இந்த தேசத்தின் காவலாளியாக நிற்பேன். இது இறைவழிபாட்டை மதிக்கும் அரசு. சுவாமி ஐயப்பன் மற்றும் சுதந்தர மகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படும்.

இந்த மண் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மண் ஜெயலலிதா போட்டியிட்ட மண், ஆனால், காங்கிரஸால் இங்குள்ள ஒருவரை கூட வேட்பாளராகக் கொண்டுவரமுடியவில்லை. தொடர்ந்து வெளியூர்களில் இருந்தே வேட்பாளர்களை இறக்குமதி செய்கிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்