மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் - 3 ஊடக நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் - 3 ஊடக நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி இண்டியா டிவி, சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் 543 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 295 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றிபெறும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 127, இதரகட்சிகளுக்கு 121 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி கருத்து கணிப்பு :

* உத்தர பிரதேசத்தில் பாஜக 46, பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி- 29, காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளைக் கைப்பற்றும்.

* மத்திய பிரதேசத்தில் பாஜக 23, காங்கிரஸ் 6, ராஜஸ்தானில் பாஜக 19, காங்கிரஸ் 6, சத்தீஸ்கரில் பாஜக 5, காங்கிரஸ்6, பிஹாரில் பாஜக-ஐக்கிய ஐனதா தள கூட்டணி- 31, ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி 7, மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 36, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 12, குஜராத்தில் பாஜக 24, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நவ் கணிப்பு :

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 , காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 149, இதர கட்சிகளுக்கு 115 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

* உத்தர பிரதேசத்தில் பாஜக 50, பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி 27, காங்கிரஸ் 3 தொகுதிகளைக் கைப்பற்றும்.

* மத்திய பிரதேசத்தில் பாஜக 20, காங்கிரஸ் 9, ராஜஸ்தானில் பாஜக 18, காங்கிரஸ் 7, குஜராத்தில் பாஜக 22, காங்கிரஸ் 4, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38,  காங்கிரஸ் கூட்டணி 10, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் -20, தெலுங்கு தேசம் 5, கர்நாடகாவில் பாஜக கூட்டணி 16, காங்கிரஸ் கூட்டணி 12.

நியூஸ் நேஷன் கணிப்பு :

நியூஸ் நேஷன் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 278, காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக எளிதாக ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.