மக்களோடு மக்களாக பழகும் இயல்பு - ஆட்சியர் திரு. கந்தசாமி

மக்களோடு மக்களாக பழகும் இயல்பு - ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் பொறுப்பு 31stஆகஸ்ட், 2017, ஏற்ற நாளிலிருந்து அவரது, கடமைகளின் செயல்பாட்டினை விவரிக்க இந்த ஒரு பதிவு போறாதுஇவரிடம் கொடுக்கப்படும் ஒவ்வொரு காகித மனுவும் உயிர் கொள்வதாக கருதப்படுகிறது


திருவண்ணாமலையில், ஆட்சியருக்கும் மக்களுக்கும் இடைவெளி குறைந்து, மக்களோடு மக்களாக பழகும் இயல்புவேறுயாரிடமும் கிட்டத்தில் காணவில்லை என்று கூறுகின்றனர்.  இவர் பெண்களுக்காக எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்கா. அவர் கூறியது, "பெண்கள் இல்லாத சமுதாயத்தை நோக்கி நாம் போய் கொண்டிருக்கிறோம். இது தெரியவரும் பொழுது, சரிபண்ண முடியாத சூழ்நிலையில் சமுதாயம் போராட வேண்டிவரும்.  ஆணோ, பெண்ணோ குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் செல்வம். குழந்தை இல்லாதவர்களுக்குதான் அந்த ஏக்கம் தெரியும்அந்த இயற்கையைமீறி, பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது எவ்வளவு பெரிய குற்றம்”,

மேலும், “திருவண்ணாமலையில், ஆண்-பெண், பிறப்பு விகிதத்தை, பார்க்கும்பொழுது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரம் பேருக்கு 920 ஆக இருந்ததுஅது இப்பொழுது 850 ஆக குறைந்துள்ளது.எங்கோ தவறு நடக்கிறது என்று ஆராய்ந்ததில் போலி மருத்துவர்கள் கருகலைப்புமையங்கள், திருவண்ணாமலையில், ரகசியமாக இரவில் மட்டுமே இயங்கி, பெண் சிசுவை ஸ்கேனில் கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்தது தெரியவந்ததுசராசரியாக, ஒரே ஒரு மையத்தில், 19000 கருக்கலைப்புகள் நடந்திருக்கலாம் என தெரிகிறது. மருத்துவ கருவிகளை பறிமுதல் செய்து, அக்கட்டிடத்தை சீல் வைத்து அவர்களை சிறையில் அடைத்துள்ளோம்இன்னும் சில மையங்களை கண்டறிந்து அடைத்து உள்ளோம்இதில் ஒரே ஒரு பெண் மருத்துவர் ஈடுபட்டிருந்தது மிகவும் வேதனை அளித்தது”.

இன்னொரு பக்கம்,  குழந்தை தொழிலார்கள், மகளிர் காப்பகங்களில் மிருகங்களை போல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் சீண்டல்கள், முதியோர்களை பாரமாக நினைத்து விரட்டியடிக்கும் வாரிசுகள். பெண் சிசுவை அழிப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதால், மனிதத்தையும், மனிததன்மையையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறோம்” என்கிறார் கலெக்டர் கந்தசாமி.

திருவண்ணாமலையில், தாய் இறப்பு விகிதம், 2017-2018 இல், 111.1 ஆக இருந்தது, அதை 2018-2019 இல், 54.36 ஆக குறைக்கபட்டது என்றும் மேலும்பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம், 11.9, ஆக குறைக்கப்பட்டது  2018 இல்இது மாநில சராசரியான 17 விட குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கதுஅதிக குழந்தைங்களை பெற்றடுக்கும், பருவமங்கை மகப்பேறுகளை, சிறுவயதிலேயே திருமணம் ஆவதை தடுத்தார், 2017-2018 ஆண்டு 168, 2018 டிசம்பர் வரை 166, பெண் குழந்தைகளின் திருமணத்தை தடுத்து முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுத்துள்ளார்.

இவர் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து, பெண்களை காப்பாற்றியது, மிகவும் பாராட்டிற்க்குரியது. MERCY அடைக்கலப் புறத்திலிருந்து மொத்தம் 50 பெண்களை மீட்டுஅவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்து, அதை நடத்தி வந்த லூபன்குமார், அவரது மனைவி, சகோதரன் மீது தக்க நடவடிக்கை எடுத்தார். அப்பெண்களை லூபன்குமார் பாலியல் ரீதியாக மிகவும் தொல்லை கொடுத்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும், அருணை இல்லம் மற்றும் ரெயின்போ ஹோம்ஸ் ஆகிய காப்பகத்திலிருந்து பெண் குழந்தைகளையும் காப்பாற்றி அவர்களை அரசு காப்பகத்தில் சேர்த்தார். இவரது RECEPTION ஹோம்ஸ் திட்டத்தின்கீழ், வாராவாரம், குழந்தைகளை சனி, ஞாயிறு இரண்டு நாளும், நல்ல பழக்கவழக்கங்களை, எவ்வாறு கல்வி கற்று முன்னேறி வரவேண்டும் என்பதை சொல்லி கொடுத்து, உற்சாகபடுத்தியும் வருகிறார்.

இவர் நவம்பர் மாதத்தில் நடத்திய, "என் கனவு" வாழிலாக, 2508 பள்ளியிலிருந்து 194940 பெண் பிள்ளைகள், தங்களது பெற்றோர்களுக்கு, தபால் அட்டையில், தங்களது ஆசைகளை, படிக்கவேண்டும், தாங்கள் என்ன ஆக வேண்டும் என விருப்பபடுகிறார்கள், தங்களது லட்சியம், தங்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் வேண்டாம், என எல்லாவற்றையும் எழுதி, தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பவேண்டும்இதனால் பழைய பாரம்பரியமான தபால் மூலம் எழுதுவது என்பது, புதிய உயிரோட்டம் பெற்றது. மத்திய அரசின், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், BETI BACHAO, BETI PADAO, திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறந்த மாணவியர்களை அவரது அலுவலகத்தில்,பெப்ரவரி 11th அவருடன், அவருடைய ஒருநாள் முழுதும் உள்ள அலுவலக நிர்வாகத்தை கவனித்து, அவருடன் மதிய உணவும் உட்கொண்டனர்.

மேலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இரயிலில் 300க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை சுற்றுலா அழைத்துசென்றார்,  

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வரையில். இதில் அவர் பெண் குழந்தைகளுடன் கல்வியின் முக்கியத்தை பேசியும்சீட்டுக்கட்டில் மாஜிக் செய்தும், பெண் குழந்தைகளை மகிழ்ச்சியிலும், வியப்பிலும், திக்குமுக்காட செய்தார்இதில் ஒவ்வொரு ஸ்டேஷன் வந்தவுடன் குழந்தைகள் தங்களிடம் இருந்த காகித துண்டு பிரசுரங்கள் மூலம் பெண்களை கல்வி கற்பிப்போம், பெண்களை காப்பாற்றுவோம்விழிப்புணர்வு செய்து வந்தனர்.

அதேபோல கற்பூரத்தின் மீது சத்தியம் செய்து, பெண்களை, பெண் சிசுவதை, கருக்கலைப்பை, செய்யமாட்டோம் என்றும், இத்திட்டத்தை, மாவட்ட சமூகநலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம்இளம் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி பள்ளிக்கு வரும் தாய்மார்களை, மாவட்டத்தில் 19 ஒன்றியங்களில் 2127  அங்கன்வாடி மையங்களிலும் உள்ள தாய்மார்களைதாம்பூல தட்டில் வைக்கப்பட்ட ஆர்த்தி தட்டுடன் வரவழைத்தனர். கிராமங்களில் பெண்கள் உற்சாகத்துடன் மைதானத்தில் குவிந்தனர்.அவர்கள் செய்த சத்தியம் "பெண் சிசுவை கருவிலேயே கண்டு கொலை செய்யமாட்டோம். படிக்கும் வயதில் பெண் குழந்தை திருமணம் செய்யமாட்டோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் உயர்க்கல்வியை கண்டிப்பாக வழங்குவோம்”.

இதுமட்டும் இல்லாமல், இவரிடம் வந்து மனு கொடுக்கும் பெண்களுக்கும் கல்லூரியில் படிக்க சிபாரிசு செய்தும், கல்விக்கான கட்டணத்தையும் செலுத்தி,  அவர்கள் பாதியில் படிப்பை விடகூடாது என்பதில் அக்கறையும் காட்டிவருகிறார்வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் அவர்களுக்கு வீடு வழங்கியும், தாய் தந்தை அற்ற மூன்று, இரண்டு பெண்கள், ஒருதம்பி, பெரிய அக்காவிற்கு அரசு வேலை ஆணை கொடுத்து, தங்கை தம்பிக்கு மேற்படிப்புக்கு ஏற்பாடுசெய்து,  பசுமை திட்டத்தின் கீழ் வீடும் கட்டி கொடுத்தார்ஒரு மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளி மகளின் மனுவை பரிசீலினை செய்து, அப்பெண்ணின் அம்மா வேலை செய்யும் வீதிக்கே சென்று, அந்த பெண்ணின் மேற்படிப்பு ஆணையையும், மற்றும் உதவிதொகையும் கொடுத்தார்அப்பெண்ணின் அம்மாவிற்கும் நிரந்தர பணிக்கு உண்டான நியமன கடிதத்தையும் வழங்கினார்அக்குடும்பம் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயினர்.

யார்எவரேனும், எந்த விஷயத்தை சொன்னாலும், அதில் தான் என்ன செய்தால் நிலைமை முன்னேறும் என்பதை பார்த்தும், அதில் அவர்களை எந்த திட்டத்தின் கீழ் ஆதரிக்கலாம் என்றும் பார்ப்பார்ஜடேறி என்ற நாமக்கட்டி செய்யும் கிராமத்தில் அவர் செய்ததை இங்கு சொல்லியே ஆக வேண்டும். அந்த ஊர் மக்கள் தண்ணீர், இலவச மண்,  ஆகியவை இல்லாமல் இல்லல் பட்டுயிருந்தார்கள்முத்ரா திட்டத்தின் கீழ்ஒரு லக்ஷம் கடன்தொகை, அதில் 35000 மானியம், பாக்கி 65000, அதை அவர்கள் 5000 மூன்று மாசத்துக்கு ஒருமுறை அடைத்தால்போதும்அவர்களுக்கு போதிய நீர்வசதி செய்தும், அவர்களுக்கு சாலை வசதி, மற்றும் அவர்களது நாமகட்டி நேர்முறை விற்பனைக்கு போதுமான வசதியும் செய்ய உள்ளார்.

ஒரு கல்லூரியில் இவரது தலைமையில் நடத்திய நிகழ்ச்சிமாற்று பொறுப்பு” (ROLE REVERSAL) என்ற தலைப்பில், மாணவிகள் எல்லோரும் பேசி, அரட்டை அடித்தும், ஆடிபாடியும் அங்குள்ள கல்லூரி மைதானத்தில் விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டும். மாணவர்கள் அன்று சமையல் செய்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகைழ்ச்சியின் கருவூலம்ஏன் என்றால் ஆண் மகன்களுக்கும் தெரிய வேண்டும், பெண்கள் செய்யும் வீடு வேலையின், அருமை பெருமைகள் என்று எண்ணினார்.

பெண்களை மதிக்க தெரிந்த சிறந்த மனிதர் ஒருவருக்குதான், பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் பற்றி சிந்தித்தும், செயல்பட்டும்அவர்களது நம்பிக்கையையும் பெறமுடியும்இவர் சொல்வதோடு இல்லாமல்பல நலதிட்டங்களை கிடைக்காத அனைவருக்கும் கிடைக்கும்படி செய்கிறார்இவரது அயரா முயற்சியை, தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று, 24.01.2019, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் டெல்லியில் அன்று பெற்றார், மாவட்டம் சார்பாகஇதில் 5 மாநில அளவிலும், 25 மாவட்ட அளவிலும், தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

இவரது முயற்சி, சேவை என்றும் தொடர வேண்டும் என வாழ்த்தி, இவரை மனிதருள் மாணிக்கம் என்றுதான் பாராட்ட வேண்டும்.

விஜயஸ்ரீரமேஷ், வழக்கறிஞர், சென்னை.