மக்கள் சேவையில் மின் வாரிய ஊழியர்கள்

மக்கள் சேவையில் மின் வாரிய ஊழியர்கள்

'கஜா' புயலினால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆயிரகணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், புயல் கரையை கடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் பல கிராமங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்யும் பணியில் சேலம், தருமபுரி, திருப்பூர், கோவை,ஈரோடு, திருநெல்வேலி ஆகிய வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ள மின் வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் உழைக்கின்றனர். அந்த பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கிவிட்ட போதும் கொட்டும் மழையில் நனைந்த படியே மின் கம்பங்களை நடுகின்றனர். இவர்களது இந்த சேவையை மக்கள் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.