மக்கள் மனதை "நல்லாட்சி"  செய்யும் வாஜ்பாய்

மக்கள் மனதை "நல்லாட்சி" செய்யும் வாஜ்பாய்

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர், வாஜ்பாய் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனாலும், அவர் மறைந்த போது மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏனென்றால், அவர் எல்லா தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டவர். இந்தியா உருவாக்கிய சிறந்த பேச்சாளர்களுள் அவரும் ஒருவர். பதவியில்லை என்றால் பலரும் பொறுமை இழந்து விடுகிறார்கள். ஆனால், பல வருடங்கள் எதிர் கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்த போதும் வாஜ்பாய் அவர்கள் ஒரு போதும் பொறுமை இழந்ததில்லை.அவர் தேச நலனை குறித்து மட்டுமே பேசினார். அவர் ஜனநாயகத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தன் கொள்கைகளில் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. அவரது வாழ்க்கை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கும்." என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி, கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

நாளை வாஜ்பாயின் பிறந்த தினம் "நல்லாட்சி தினமாக" கொண்டாடப்படுகிறது.