மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - புல்வாமா தாக்குதல்

மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - புல்வாமா தாக்குதல்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்கினால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதோ, தரக்குறைவான விமர்சனங்களைக் கூறுவதோ கூடாது. இந்த நேரத்தில் எவரது தனிப்பட்ட பெயரையோ அல்லது அரசியல் கட்சியின் பெயரையோ கூறி இதில் அரசியலை இழுக்கவோக்கூடாது.  இந்த பயங்கரவாதத் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தாலோ அல்லது மற்றவர்களை விமர்சிக்க இதனைப் பயன்படுத்தினாலோ மக்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி