மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் - உலக நாடுகள் வலியுறுத்தல்

மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் - உலக நாடுகள் வலியுறுத்தல்

சமீபத்தில், புல்வாமாவில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, டிரம்ப், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை ஐ.நா., கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இதனையடுத்து உலக நாடுகளும் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.