மசூத் அசார் விடுதலை

மசூத் அசார் விடுதலை

ஜெய்ஷ் -இ - முகமது  பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  காஷ்மீர் விவகாரத்தில் தோல்வி அடைந்தபின் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை ஏற்படுத்தவே மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.  

 UAPA  சட்டத்தின் கீழ் மசூத் அசாத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.