மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயமிருக்கும் - மத்திய நிதி அமைச்சர்

மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயமிருக்கும் - மத்திய நிதி அமைச்சர்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சி.பி.ஐக்கு தங்கள் மாநிலங்களில் உள்ள பொது ஒப்புதலை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளனர். இதனால், அந்த  மாநிலங்களில் சி.பி.ஐ ஆய்வு செய்ய முடியாது. அப்படி செய்வதற்கு முன் அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும்.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி மறைப்பதற்கு நிறைய வைத்திருப்பவர்கள் தான் சி.பி.ஐயை கண்டு பயப்படவேண்டும் மற்றவர்கள் பயப்பட தேவையில்லை என்றார்.