மதம் மாற்றினால் தண்டனை

மதம் மாற்றினால் தண்டனை

தொண்டுநிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று கொண்டு மதம் மாற்றினால் நிறுவனம் தடை செய்யப்படவதுடன் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

இந்தியாவில் பல தொண்டு நிறுவனங்கள் அயல் நாடுகளில் இருந்து பெரும் நன்கொடைக்கு வரிகட்டாமல் வரிஏய்ப்பு செய்வதுடன் மக்களை மத மாற்றும் பணியையும் செய்து வருகின்றன. இதை தடுக்கும்  நோக்கோடு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  அதில் நன்கொடை பணத்தை கொண்டு எந்த மனிதரையும் அவர் பின்பற்றும் மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்ற கூடாது அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சிறை தண்டனை அளிக்கப்படும் என கூறப்பட்டுளது.