மதம் மாற்றினால் மாத சம்பளம் ; ஆந்திர அரசு அறிவிப்பு

மதம் மாற்றினால் மாத சம்பளம் ; ஆந்திர அரசு அறிவிப்பு

ஜெகனின் மேலும் ஒரு உத்தரவு சர்ச்சையை  கிளப்பியுள்ளது . திருப்பதியில் ஜெருசலேம் யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் வெளியானது அதனை தொடர்ந்து இப்பொழுது கிறிஸ்துவ போதகர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆந்திரா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் இதற்கான சுற்றறிக்கையை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி கிராம தொண்டர்கள் உதவியுடன் போதகர்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறது. தற்போது இந்த அறிவிப்புக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதில் ``ஆந்திர மக்களை மத அடிப்படையில் ஜெகன் அரசு பிரித்துவருகிறது. கிராமத் தொண்டர்களைப் பயன்படுத்தி போதகர்களைக் கண்டுபிடிப்பதற்காக கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் போதகர்களுக்கு பணம் செலுத்துவதில் பொதுப் பணத்தை செலவிடுவது இழிவான செயல். இது அரசால் ஊக்குவிக்கப்படும் மத மாற்ற நடவடிக்கையாகும். ஒய்.எஸ்.ஆர் கட்சியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க கடுமையாக கண்டிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது