மதம் மாற்றும் கம்யூனிஸ்ட்டு..!  காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டம்..!

மதம் மாற்றும் கம்யூனிஸ்ட்டு..! காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டம்..!

மதுரையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பாராட்டுக்குரியவர். அவருக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்து பதவி காலத்தை இன்னும் நீட்டிக்க வேண்டும். அவருக்காக போராட்டம் நடத்தவும் தயார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்குவது வரவேற்கத்தக்கது. பிட்டுக்கு மண் சுமந்த சிவனை போற்றும் விதமாக இலவச பிட்டு வழங்கினாலும் நல்லது தான்.

கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும். அறநிலைத்துறையில் ஊழல் மலிந்து விட்டது. மதுரை சமயநல்லுாரில் ஒரு சமூகத்தினரை மதம் மாற்றும் முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டு ஜாதி கலவரத்தை துாண்டி வருவது கண்டிக்கத்தக்கது, என்றார். நிர்வாகிகள் அழகர்சாமி, சேவுகன் உடனிருந்தனர்.