மதுரையை தொடர்ந்து விருதுநகரிலும் கம்யூனிஸ்ட், திமுக கட்சியினர் ஓட்டு கேட்டு வராதீர்கள் - ஐயப்ப பக்தர்கள்

மதுரையை தொடர்ந்து விருதுநகரிலும் கம்யூனிஸ்ட், திமுக கட்சியினர் ஓட்டு கேட்டு வராதீர்கள் - ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கேரள கம்யூ., அரசு, சபரிமலை கோயிலுக்கு இளம் பெண்களை அனுப்புவதில் ஆர்வம் காட்டியது. இது ஐயப்ப பக்தர்களிடையே கம்யூ., மீது கோபத்தை அதிகப்படுத்தியது. ஐயப்ப பக்தர்களும், மக்களும் போராட்டத்தில் குதித்தனர். 

தற்போது ஐயப்ப பக்தர்கள் கோபம் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் மீது பாய்ந்துள்ளது. விருதுநகரில் அய்யனார் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், தங்கள் வீட்டு சுவரில் 'எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனை கும்பிடுபவர்கள். கம்யூ., தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதே போன்று இனி அனைத்துபகுதியிலும் ஒட்டுவோம், என்றனர் இப்பகுதி ஐயப்ப பக்தர்கள்.