மதுரை - சென்னை தேஜஸ் ரயில் சேவை இன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்

மதுரை - சென்னை தேஜஸ் ரயில் சேவை இன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்

மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் முதல் சேவையாக மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூரை இரவு 9.15 மணிக்கு வந்தடையும். 

வழக்கமான சேவை தொடங்கிய பிறகு, இந்த ரயில் சென்னை-மதுரை இடையே 496 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம் மற்றும் 30 நிமிஷத்தில் அடைந்துவிடும். ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி. விளக்குகள், ரயில் பெட்டியின் உள்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள் வசதி, செல்லிடப்பேசி சார்ஜ் செய்யும் வசதி, ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்கள் இயக்கப்படும்.