மதுரை வருகிறார் பிரதமர்

மதுரை வருகிறார் பிரதமர்

தமிழ்நாட்டில் மதுரை மாநகரில்  ரூ.1,200 கோடி செலவில் எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்  ஞாயிறன்று மதுரை வருகிறார். எயிம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியபின் அவர் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.

அவர் பிரதமரான பின் மதுரை வருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2012ம் ஆண்டு அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது சர்வ தேச சௌராஷ்டிர மாநாட்டை துவக்கி வைக்க மதுரைக்கு வந்தார். அதன் பின் மீண்டும் இப்போது தான் வர உள்ளார். எனவே,  பிரதமரின் வருகையை மதுரை மக்கள் உற்சாகத்துடன் எதிர்ப்பார்த்துள்ளார்கள்.