மத்திய அமைச்சரின் காரை சோதனையிட்ட போலீஸ்

மத்திய அமைச்சரின் காரை சோதனையிட்ட போலீஸ்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலையணிந்து  சபரிமலைக்கு சென்றார். அவர் ஒரு காரிலும் உடன் சென்றவர்கள் ரெண்டு கார்களிலும் சென்றனர்.  நிலக்கல்லில் அமைச்சரின் காரையும், அவருடன் வந்த கார்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் சோதனையிட்டனர். பின்னர், அவர்கள் தங்கள் யாத்திரையை தொடர அனுமதிக்கப்பட்டனர். 

தல யாத்திரை சென்ற மத்திய அமைச்சரை கேரள போலீசார் நடத்திய விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள போலீஸார் கூறுகையில்,"சபரிமலை விவகாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கும் ஒரு பாஜக பிரமுகரை தேடிவருகிறோம்.  அவரை தேடும் பணியில் அமைச்சரின் காரையும் சோதனை செய்தோம்" என்றனர். 

கேரள போலீசாரின் இந்த பதிலால் மேலும் கோபமடைந்த பாஜகவினர் அமைச்சரின் சொந்த மாநிலமான கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.