மத்திய அரசு, விமானப்படையை பாராட்டி ஆர்எஸ்எஸ் தீர்மானம்

மத்திய அரசு, விமானப்படையை பாராட்டி ஆர்எஸ்எஸ் தீர்மானம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை உருவாக்கக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபையின் 3 நாள் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைக்காக இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

தேச விரோத சக்திகளை கையாளும் நடவடிக்கையில் மத்திய அரசு சரியான முடிவை மேற்கொண்டுள்ளது. அத்தகைய சக்திகளிடம் இருந்து இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவின் சகிப்புத்தன்மையை அதன் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த 3 நாள் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பைய்யாஜி ஜோஷி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சுமார் 1,400 பேர் பங்கேற்கின்றனர். 

மக்களவைத் தேர்தல் தொடர்பாக குறிப்பாக ஏதும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. அதிகளவிலான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றே விருப்பம் தெரிவிக்கப்பட்டது. சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகளின் எண்ணிக்கை 58,967-இல் இருந்து, 59,266-ஆக அதிகரித்துள்ளது என்று மன்மோகன் வைத்யா கூறினார்.