மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல்

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல்

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று சட்டபேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.  40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸுடன் பாஜக  பலப்பரிட்சையில் இறங்கியுள்ளது.

230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறையாக முதல்வர் சிவராஜ் சிங் ஸௌஹான் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மாரடைப்பினால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி வி.காந்த ராவ் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் வரும் டிசம்பர் 11ம் தேதி வெளிவரும்.