மத மாற்றத்தை ஊக்குவிக்கும் கேரள அரசாங்கம்

மத மாற்றத்தை ஊக்குவிக்கும் கேரள அரசாங்கம்

            இந்த நாட்டில் உள்ள அனவைரும் கிறிஸ்துவர்களாக மதம் மாற்றப்பட்டு போலி கடவுள்களின் ஆலயங்கள் தரைமாக்கப்பட்டு விக்கிரங்கள் சுக்குநூறாகப்படும் பொது நான் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வேன் இது கண்டிப்பாக நடக்கும் என சபதமிட்ட புனித சவேரியரின் கூற்றுக்கு ஏற்ப, மதசார்பற்ற அரசு, மதம் ஒரு அபின் என புராணம் பாடும் இடதுசாரிகளின் ஆட்சியில் மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு உதவி புரிவதற்காகவே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  1980-ல்  தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட சாதியிலிருந்தும் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு   Kerala State Development Corporation for Christian Converts from Scheduled Castes and the Recommended Communities Ltd  என ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்கள்.   இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்தும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமூகத்திலிருந்தும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களின் விரிவான சமூக, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறவும், வாழ்வாதாரங்களிலிருந்து மேம்படவும் நிறுவப்பட்டதாக தெரிவித்தது அரசாங்கம்.

       மேற்படி  நிறுவனத்தின் மூலம் விவாசாய நிலங்கள் விலைக்கு வாங்கவும்வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கவும், வீடு கட்டுவதற்கும், வீடு மறுசீரமைப்பு செய்வதற்கும், திருமண கடன், சுய தொழில் துவங்க, கல்விக் கடன், வீடு இல்லாதவர்களுக்கும், நிலம் இல்லாதவர்களுக்கும் உதவி புரியும் விதமாகவும், தனி நபர் கடனாகவும் வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் பணியாகும்.       மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களை விரிவாக மதமாறிய கிறிஸ்துவர்களிடம் கொண்டு செல்வதற்காகவே கேரள மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு்ள்ளது.   மத மாறிய கிறிஸ்துவ இளைஞர்களுக்கு வேலையுடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தையும்  செயல்படுத்துகிறார்கள்.   இவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தை விலை கிடைக்க, உரிய மார்க்கெட் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதுபடிக்கின்ற மாணவர்களுக்கு உயர் படிப்பு வரை இலவச கல்வி கொடுக்கப்பதும் இந்த நிறுவனத்தின் பணியாகும்.  2010-ல் இந்த நிறுவனம் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் ஒரு லட்சம் பேர்களுக்கு 159 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளதுஇதில் வட்டியில்லாத கடனும் அடக்கமாகும்.

                கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுக்கும் போது, சத்தமேயில்லாமல், கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினர் வாங்கிய கடன்களில் ரூ25,000   கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுஇவ்வாறு கடன் தள்ளுபடி செய்த தொகை ரூ 159 கோடியாகும்.    மேற்படி கடன் தள்ளுபடி திட்டத்தை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் திரு. .கே.பாலன், சமூதாயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது என்றார்ஆனால் இந்து சமூதாயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடையாதுஇதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்யும் ஒரு வழி முறையாகும்தாழ்த்தப்பட்ட பிரிவினர் அனைவருக்கும் இந்த திட்டம் கிடையாது.   வாடிக்கன் நகரின் திட்டமிடலில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.  

                கேரள அரசை போலவே தெலுங்கான அரசும் ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளதுதாழ்த்தப்பட்ட பிரிவினர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை கொடுக்கும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.   20.12.2014ந்  தேதியிட்ட அரசாங்க ஆணையின் படி சமூக நலத் துறையின் சார்பாக  State Christian (Minorities ) Finance Corporation , Hyderabad Lr.No. 1100/CMFC/Con-11/2014,dt.30.06.2014 and dt.18.08.2014.              என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.    United Christmas Celebrations Committee  கொடுத்த மனுவின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது.   ஏற்கனவே தெலுங்கனா அரசாங்கமானது, தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக பொருளாதார ரீதியாக நிதி உதவி அளிக்க Andhra Pradesh Scheduled Castes Cooperative Finance Corporation  என்ற அமைப்பின் மூலம், Scheduled Castes பிரிவினர் கிறிஸ்துவ மதத்திற்கு  மதம் மாறியவர்களுக்கும் இந்த நிறுவனம் மூலம் நிதி உதவி புரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.   

                இதனால் தெலுங்கனா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்களும் தங்களுக்கும் இந்த சலுகை கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக நிலம் இல்லாத தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஏக்கர் நிலம் வழங்குவதை, மதம் மாறியவர்களுக்கும் கொடுப்பது போல், மதம் மாறிய பிற்படுத்தப்படட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  

                எனவே வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்தவுடன், கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சலுகைகள் என்ற பெயரில் மத மாற்றம் ஊக்கம் கொடுக்கப்படுகிறதுஎந்த நேரத்திலும் வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை கேரளத்திலும்தெலுங்கானாவிலும் ஏற்படலாம்இந்த இரு அரசுகளும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டில் ஈடுபடுகிறது என்பது திண்ணம்.

-ஈரோடு சரவணன்