மனித கழிவுகளை மனிதனே அகற்றும்  அவலத்தை ஆதரிக்கும் இரட்டை நாக்கு திருமாவளவன்..!

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஆதரிக்கும் இரட்டை நாக்கு திருமாவளவன்..!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்தால் அங்குள்ள சுமார்11 லட்சம் பட்டியலின மக்கள், காஷ்மீரின் இரண்டாம் தர குடி மக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு காஷ்மீர் அரசு வேலை வாய்ப்பில் இடமில்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது. சட்ட கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகள் படிக்க அனுமதி கிடையாது.

அவர்களுக்கு இருப்பிட சான்று வழங்கப்பட மாட்டாது, உள்ளாச்சி தேர்தல்களில் ஓட்டு உரிமை கிடையாது. பட்டியலின மக்களுக்கான எந்த சலுகையும் கிடையாது, 

காலம் காலமாக அவர்கள் மலம் அள்ளும் தொழில் மட்டுமே செய்து வந்துள்ளனர். வேறு வேலைகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கும் சம உரிமை கேட்டு 1957-ஆம் ஆண்டு அங்குள்ள பட்டியலின மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காஷ்மீர், ஜம்மு பகுதிகள் குப்பை மேடாயின. ஆனாலும் அவர்களுக்கு எந்த உரிமையும் கடைசி வரை வழங்கப்படவில்லை. 

அதற்குப் பதிலாக அண்டை மாநிலமான பஞ்சாப்பின் குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இருந்து துப்புரவு தொழிலாளர்களை கொண்டு வந்து குப்பைகளையும், மலத்தையும் அள்ளினர். இப்படித்தான் பட்டியலின மக்களின் உரிமை போராட்டம் நசுக்கப்பட்டது. அதே நேரம் அவர்களின் உரிமை இறுதிவரை மறுக்கப்பட்டது.

இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் தாண்டி அங்குள்ள பட்டியலின மக்களில் பலர் முதுகலை வரை படித்துள்ளனர். ஆனால் அவர்களால் குப்பை அள்ளும் வேலை, மலம் அள்ளும் வேலையைத் தவிர வேறு எந்த அரசு வேலையிலும் சேர முடியவில்லை. காரணம் அவர்களுக்கு தகுதி இல்லையாம். 

இதுதான் தனி அந்தஸ்தால், காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களின் உண்மை நிலை. ஆமாம் காஷ்மீரின் அந்தபுரம் இவ்வளவு கேவலமானதாக நாறியது 370-ஆல்.

பிரதமரர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இப்போது காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு விடுதலை வழங்கி உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போதுதான் அவர்கள் அடிமைதளையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

மோடி அரசு துணிந்து 370, 35ஏ ஆகிய சட்ட பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அங்குள்ள பட்டியலின மக்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது.

நேரு என்கிற தனி மனிதரின் பிடிவாதத்தால்தான் 370, 35ஏ சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன. அன்றைய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவரும் சட்ட அமைச்சருமாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் இந்தப் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்க மறுத்தார். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல், அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். 

இதனால், பிரதமராக இருந்த நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்காரின் உதவியுடன் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைத்தார். இதுதான் வரலாறு. ஆமாம் வரலாற்று பிழை. இப்போது திருத்தப்பட்டுள்ளது.

இதை, காஷ்மீரில் உள்ள ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். 

மனித இதயம் கொண்ட அனைவரும் இந்த மகத்தான வரலாற்று நிகழ்வை வரவேற்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள பட்டிலின மக்களுக்கு இப்போதுதான் ஒரு உண்மை தெரிகிறது. காஷ்மீரில் உள்ள தங்களின் சகோதர்கள் இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு கொடுமைகளையும், அடிமைத்தனத்தையும் அனுபவித்து வந்துள்ளனரே. இது எவ்வளவு பெரிய கொடுமை? இது இப்போதுதானே வெளி உலகத்திற்கு வந்துள்ளது? என்ற கேள்விகளும் எழும்.

ஆனால் நமக்கு மற்றொரு கேள்வி எழுகிறது.

காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களின் விடுதலையை, திருமாவளவன் ஏன் எதிர்கிறார்? தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன? அவர்களுக்கு சலுகைகள், இட ஒதுக்கீட்டு உரிமைகளை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?