மன்னிப்பு கோரியது லயோலா கல்லூரி

மன்னிப்பு கோரியது லயோலா கல்லூரி

சென்னை லயோலா கல்லூரியில் 'வீதி விருது விழா' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. அதில் இந்து மதத்தையும், பாரத மாதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இழிவுபடுத்தி ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சிக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து முன்னணி உட்பட பல இந்து இயக்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த ஓவியங்கள் நீக்கப்பட்டதுடன், லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பும் கோரியுள்ளது.