மம்தா பானர்ஜிக்கு அமித்ஷாவின் எச்சரிக்கை

மம்தா பானர்ஜிக்கு அமித்ஷாவின் எச்சரிக்கை

மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காள அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில் மேற்குவங்காளத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகவும் அது மக்கள் மனதில் காவல்துறை மீது உள்ள நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வன்முறைகள் மேலும் நடக்காமல் இருப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையும் மாநில அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது மத்திய அமைச்சகம். கடமையை சரியாக செய்யாமல் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.