மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு

மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு

மராட்டியர்களுக்கு வேலை மற்றும் கல்வியில் 16% இட ஒதுக்கீடு அளித்து மகாராஷ்டர சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. மகாராஷ்ட்டிரத்தில்  மொத்த இட ஒதுக்கீடான 52 சதவிகிதத்தில்  இது 68% ஆகும். மஹாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில் 30% உள்ள மராட்டியர்கள் தங்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வந்தனர்.

மாரட்டியரகள் பெரும்பாலும்  விவசாயிகளாவர். மேலும், மஹாராஷ்டிர அரசியல் கட்சிகளில் இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். ஆனாலும், அரசியல்வாதிகள் தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் பட்டியலின பிரிவு மக்களை விட தங்கள் வாழ்க்கைதரம் மிகவும் பின் தங்கியுள்ளது என்று அவர்கள் எண்ணினர்.அவர்களது போராட்டங்களுக்கு செவி சாய்த்து மஹாராஷ்டிரத்தில் உள்ள தேவேந்திர பட்நாவிஸ் அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.