மர்ம பேச்சு

மர்ம பேச்சு

கடந்த சில வாரங்களாக கொல்கத்தா நகரில் தொழிற்முறையில் இல்லாத ஹம் ரேடியோ இயக்குபவர்கள் சில வினோதமான ரேடியோ உரையாடல்களை கேட்டிருக்கின்றனர். நள்ளிரவுக்கு மேல் கொல்கத்தா நகரை சுற்றி  25 - 30கி.மீ சுற்றளவில் இந்த ரேடியோ உரையாடல்களை அவர்கள் கேட்டிருக்கின்றனர்.

பெங்கால் அமெசுர் ரேடியோ கிளப் செயலாளர் அம்ரிஷ் நாக் பிஸ்வாஸ் இது பற்றி கூறுகையில்,"கடந்த சில வாரங்களாக நள்ளிரவுக்கு மேல் சங்கேத பாஷையில் சில ரேடியோ உரையாடல்களை நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம். அவர்களிடம் நாங்கள் பேச முயன்ற போது அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் யார் என்று நாங்கள் கேட்டபோது ரேடியோ இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அவர்கள் பேசும் பாஷை ஆப்கனிஸ்தானில் பேசப்படும் பஷ்தோ மொழியை ஒத்து இருந்தது. ஆனால், சங்கேத தகவல் பரிமாற்றங்களா இருந்ததால் சரியாக சொல்ல முடியவில்லை." என்று கூறியுள்ளார்.

இது குறித்து பெங்கால் அமெசுர் ரேடியோ கிளப்பை சேர்ந்தவர்கள் போலீஸுக்கும், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் இது குறித்து ரேடியோ அலைவரிசைகளை கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த மர்ம ரேடியோ பேச்சுக்கள் மேற்கு வங்களாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.