மறக்க முடியாத 26/11

மறக்க முடியாத 26/11

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையின் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சோகத்தின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"26/11 குற்றவாளிகளை இந்தியா ஒருபோதும் மறக்காது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர சரியான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். சட்டம் அதன் க்டமையை செய்யும்." என்று கூறினார். 

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நாடு இருப்பதாக கூறிய அவர் வீரத்துடன் தீவிரவாத தாக்குதலை  தாக்குதலை எதிர்கொண்ட போலீஸ் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு நாடு நன்றியுடன் தலைவணங்குவதாகவும் அவர் கூறினார்.