மறக்க முடியுமா ? மன்னிக்கத்தான் முடியுமா ?

மறக்க முடியுமா ? மன்னிக்கத்தான் முடியுமா ?

மறக்க முடியுமா மன்னிக்கதான் முடியுமா? 1998 ம் வருடம். பிப்ரவரி 14 சனிக்கிழமை. கோயம்புத்தூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பாஜக வின் அகில பாரத தலைவர் எல்.கே. அத்வானி வருகை தந்தார். அந்தக் கூட்டத்தில் ஏராளமான பாஜக மற்ற ஹிந்து இயக்கத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். உற்சாகமயமான இந்தக் கூட்டத்தில் திடீரென அத்வானியின் வருகைக்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு  ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட முஸ்லிம் தீவிரவாத கும்பலான அல்உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷாவின் மூளையில் விளைந்த இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி இது கோவையில் முன்பு ஏற்பட்ட சம்பவங்களின் தொடர்ச்சியே என நியாயப்படுத்த முயன்றார். 11 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஆர்.எஸ்.புரத்தில் நான்கு இடங்களிலும் பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும் அரசு பொது மருத்துவமனையில் இரண்டு இடங்களிலும் உக்கடம் பகுதியில் ஒரு இடத்திலும் பாஜக கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஒரு இடத்திலும் குண்டுகள் வெடித்தன. மேலும் சாய்பாபா காலணியில் வெடிக்காத குண்டு காருடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதை குண்டு ஒழிப்பு படையினர் இரண்டுநாட்கள் முயற்சிக்குப் பின் செயலிழக்கச் செய்தனர். குண்டு வெடித்த மறுநாள் குண்டு வெடிப்புக்குக் காரணமான நான்கு தீவிரவாதிகள் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு சரணடைய கோரியும் சரணடையாது போலீஸாரோடு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு பலியாகினர். இதற்கு பெருமளவில் வெடிமருந்து சப்ளைசெய்து உதவியாக செயல்பட்டவர் கேரளத்தில் செயல்பட்டுவரும் .எஸ்.எஸ்ஸின் தலைவரும் அரேபிய வகாபீசத்தின் மூளையாக செயல்பட்ட அப்துல்நசார் மதானியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருபது வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டு வெடிப்பு விசாரணை முடிவில் அரசின் அழுத்தத்தோடு குறைவான தண்டனையுடன் பயங்கரவாதிகள் விடுதலை பெற்றனர். முக்கிய குற்றவாளியான பாட்ஷா ஆயுள் தண்டனை பெற்றான். 84 தீவிரவாதிகளுக்கு ஐந்து அல்லது பத்தாண்டுகள் தண்டனை கிடைத்தன. முக்கிய குற்றவாளியான கேரளத்து அப்துல் நஷார் மதானி விசாரணையின்போது  சிறையில் இருந்த காலமே போதுமானதென கருணாநிதியின் கருணையுடன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது போலீஸ் பாதுகாப்புடன் தமிழக கேரள எல்லையில் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்த அப்போதைய கேரள மார்க்ஸிஸ்ட் அரசு ராஜ மரியாதையோடு அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டுசென்றது. இப்படி கோயம்புத்தூரின் அப்பாவி பொதுமக்களோடு ஹிந்து இயக்கத்தொண்டர்களையும் கொத்துக்கொத்தாக கொன்று குவித்த கொலை பாதக தினம் இன்று.

இந்த படுபாதக செயலை செய்த அல்உம்மாவின் தொடக்கத்திற்கு உடனிருந்து ஆசிவழங்கி எல்லா உதவிகளையும் செய்து வந்தவர் அப்போதைய திமுகவின் மாவட்டச்செயலரும் கோம்புத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளருமான கோவை ராமநாதன் குறிப்பிடத்தக்கவர். அன்று சிறிய செடியாய் விளைந்த அல்உம்மா இன்று மனிநேய மக்கள் கட்சி என்றபெயரில் விஷவிருட்சமாய் தமிழகமெங்கும் பரவியுள்ளது.