மாதா அமிர்தானந்தமயி தலா ரூ.5 லட்சம்

மாதா அமிர்தானந்தமயி தலா ரூ.5 லட்சம்

புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியான செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த அவர்களின் குடும்பத்தாருக்கு ஆதரவாக இருப்பது நமது கடமை. அவர்கள் குடும்பத்தினருக்கு அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாதா அமிர்தானந்தமயி அறிவித்துள்ளார்.