மாறன் சகோதரர்கள் வழக்கை சந்திக்க வேண்டும்

மாறன் சகோதரர்கள் வழக்கை சந்திக்க வேண்டும்

சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பகம் நடத்திய வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நீதிபதி ஏ.டி.ஜகதீஷ் சந்திரா எல்லா ஆவணங்களையும் சரி பார்த்து புதிதாக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு உத்திரவிட்டார். முன்னதாக மாறன் சகோதரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன்,"தயாநிதி மாறன் தனது மத்திய மந்திரி பதவியை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், வழக்குகள் விசாரணை அதிகாரியின் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே போடப்பட்டுள்ளன என்றும் இந்த வழக்குகளுக்கு ஆதாரங்கள் இல்லை" என்றும் வாதிட்டார்.

ஆனால், நீதிபதி வழக்கு தொடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.