மாறன் சகோதரா்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் – உயா்நீதிமன்றம்

மாறன் சகோதரா்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் – உயா்நீதிமன்றம்

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ பதிவு செய்துள்ள தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோாிய மாறன் சகோதரா்களின் கோாிக்கையை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தபோது பிஎஸ்என்எல் இணைப்புகளை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக கலாநிதி மாறன்தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் இதனால் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 7 போ் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் இந்த வழக்கில் தொடா்புடைய அனைவரையும் சென்னை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. 

7 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிா்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது வழக்கு தொடா்பாக மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட 7 போ் மீதும் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோாி மாறன் சகோதரா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்துக்கூட விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

மேலும் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை எதிா்கொள்ள வேண்டும் என்றும், 4 மாத காலத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.