மாவீரர் மறைந்தார்

மாவீரர் மறைந்தார்

1971ம் ஆண்டு லாங்கேவாலாவில் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் பல வீர செயல்கள் செய்த குல்தீப் சிங் சந்த்புரி இன்று அதிகாலை சண்டிகரில் காலமானார். அவருக்கு வயது  78. இவர் லாங்கேவாலா போரில் ஆற்றிய வீர செயல்களுக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது பெற்றவர். 

லாங்கேவாலா யுத்தத்தை மையமாக வைத்து "பார்டர்" என்ற இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதில், சன்னி தியோல் சந்தபுரியாக நடித்திருந்தார்.