மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை

மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை

மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் அவற்றில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது குறித்து பரப்பப்படும் வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவி பேட் என்ற சாதனமும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்துடன் இணைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அரசியல் கட்சிகள் தெளிவு பெற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ள நிலையில் நாளை எதிர்கட்சிகள் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு தில்லியில் ஏற்பாடு செய்துள்ளன.