மீண்டும் மழை

மீண்டும் மழை

கிழக்கு திசையிலிருந்து காற்று வலுபெற்று வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நவம்பர் 29ம் தேதி  முதல் டிசம்பர் 1ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலம் துவங்கியும் போதுமான மழை பொழிவு இல்லாததால் கவலையில் இருக்கும் தமிழக மக்களுக்கு இந்த செய்தி சற்று ஆறுதலை தருவதாக உள்ளது.