மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபரி மலை

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபரி மலை

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்து மத நம்பிக்கையை இழிவுப்படுத்தவில்லை என்றால் உறக்கம் வராது போல, மீண்டும் பெண்களை மாறு வேடத்தில் அனுப்பி சபரி சன்னிதானத்தின் மகிகையை சிதைக்க முற்பட்டுள்ளார்.   1.1.2019ந் தேதி விடியற்காலை 1.30 மணியளவில் பம்பாவிலிருந்து 3.30க்கு சன்னிதானம் சென்றுள்ளார்கள் இரண்டு பெண்கள்.  இவர்களுக்கு கேரள போலீஸ் முழு பாதுகாப்புடன் அழைத்து சென்றுள்ளார்கள்.  இவ்வாறு சென்ற பெண்கள் இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்பைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதை விட பயங்கரவாத அமைப்பின் அங்கத்தினர்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை

       கருப்பு உடையணிந்து, முகத்தை முழுவதும் மூடி சன்னிதானத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.   ஒருவரின் பெயர் பிந்து ஹரிஹரன்.  இவர் ஒரு வழக்கறிஞர், தலைச்சேரி பாளையாடு சட்ட பள்ளியில் துணை பேரராசிரியராக பணியாற்றுபவர்.  சி.பி.ஐ. (எம்.எல்.) அமைப்பைச்சார்ந்தவர்.  இரண்டாவது பெண்ணின் பெயர் கனகதுர்கா,  கேரள அரசின் சிவில் சப்ளை இலாக்காவில் பணியாற்றுபவர்.  இந்த அம்மையார் பெண்கள் முற்போக்கு சங்கத்துடன் தொடர்பில் இருப்பவர்.   இருவரையும் பாதுகாப்பாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இடதுசாரி அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் நயவஞ்சக தனமாக செயல்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாகவே மாநில டி.ஜி.பி.க்கு கூட  தெரியாமல், சில கம்யூனிஸ்ட் போலீஸ்காரர்களின் உதவியுடன் இந்த நாடகம் அரங்கேரியுள்ளது.   பினராயி விஜயன் தங்களுக்கு நெருக்கமான சில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்து இந்த நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.   சன்னிதானத்தின் முன் பணியிலிருந்து கேரள ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், கோகுல சந்திரன் மற்றும் கிரைம் பிராஞ்ச்  எஸ்.பி. ஷாஜி சுகுணன் என்பவர்களிடம் தெரிவித்து ரகசியமாக அழைத்து செல்லப்பட்டார்கள்.  இந்த நாடகத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கு உரிய பதில் கொடுக்க காம்ரேட்டுகளுக்கு நேரம் கிடையாது.

       கனகதுர்காவின் சகோதரர் பாரத் பூஷன் என்பவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கும், மாத்துரு பூமி இதழ்க்கும் கொடுத்த பேட்டியில், ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் சதி வேலை இது.  கோட்டயம் காவல் துறையின் சூப்பிரடெண்ட் ஹரிசங்கர், எனது சகோதரி கனகதுர்காவை சபரி மலைக்கு அழைத்து சென்றார்.  இதற்காகவே கன்னனூரில் மறைவான இடத்தில் ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டார்.  அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்காமல், சந்திக்கவிடாமலும், தொடர்பு படுத்த கூட அனுமதிக்கவில்லை.   சபரி மலைக்கு அழைத்து செல்லும் போது கூட, எவருக்கும் தெரியாமல், மிக ரகசியமாகவே அழைத்து சென்றுள்ளார்கள்.  இவர்கள் செல்வதற்கு வசதியாக முழு ஏற்பாடுகளையும் செய்து விட்டுதான் அழைத்து சென்றுள்ளார்கள். என்று கூறியுள்ளார்.

 

       கேரள அரசாங்கத்தின் சதி வேலை என்பதற்காக அரசின் உத்திரவையே அரசே மீறியுள்ளது.  இரவு நேரங்களில் சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் எவரும் தங்க கூடாது என 144 தடை உத்திரவு பிறப்பித்த கேரள அரசு, நள்ளிரவு 1.30 மணியளவில் இரு பெண்களையும் ஆண் வேடமிட்டு, அழைத்து சென்றதிலிருந்து, அரசின் அயோக்கியத் தனம் வெளிப்பட்டுள்ளது.  கேரள உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு புறம்பாகவே செயல்பட்டு வருகிறது கேரள அரசு.   சபரி மலை ஐதீகத்தை தகர்ப்பதில் முனைப்பாக இருக்கும் மார்க்கிஸ்ட்கள், உச்ச நீதி மன்ற தீர்ப்பை முன்னிலைப்படுத்தியே தங்களின் வாதத்தை வைக்கிறார்கள். 

       சம்பவம் நடந்தவுடன், கோயில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூசை நடத்தி பின்னர் நடை திறக்கப்பட்டுள்ளது.  இதற்கு கூட இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன்,  உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டிய பொறுப்பு தேவஸ்தம் போர்டுக்கும், தந்திரிக்கும் உள்ளது என்கிறார்.  உச்ச நீதிமன்றத்திற்கு தந்திரி பதில் சொல்ல வேண்டும் என்கிறார்.   இடதுசாரி கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் கொடம்பள்ளி சுரோந்திரன், நடையை சாத்த தந்திரிக்கு எந்த உரிமையும் கிடையாது, இது நீதிமன்ற அவமதிப்பு என கொக்கரிக்கிறார்.  ஐதீகத்தை மீறி செயல்பட எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்பதை மறந்து விடக் கூடாது.  தேவஸ்தம் போர்டு என்பது நிர்வாகத்தை ஒழுங்குப் படுத்தும் காரியத்தில் மட்டுமே ஈடுபட முடியும் ஐதீகத்தை மாற்ற முயலுவதற்கு எந்த அதிகாரமும் போர்டு கிடையாது என்பதை மறந்து விட்டு பேசுகிறார்.   

          கேரள மாநில அரசு சட்டமன்றத்தை கூட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்தால், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான கருத்து என கொக்கரிக்கும் பினராயி விஜயனுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் முன் வைக்கும் ஒரு கேள்வி,  1998 கோவை குண்டு வெடிப்பிலும், 2008 பெங்களுர் சீரியல் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக கூறப்பட்ட அப்துல் நாசர் மதானியை சிறையிலிருந்து விடுவிக்க 2006-ல் கேரள மார்க்சிஸ்ட் அரசு, சட்ட மன்றத்தை இதற்காகவே கூட்டி சட்டம் இயற்றி விடுதலை செய்ததே, அப்பொழுது நீதி மன்றத்திற்கு மரியாதையை கொடுத்ததா? ஒரு பயங்கரவாதியை விடுவிக்க சட்ட மன்றத்தை கூட்டியது மட்டும் உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மரியாதை கொடுத்த லட்சமா?

       உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட முடியாது என கூறும் காம்ரேட்டுகளுக்கு ஒரு கேள்வி, உச்ச நீதி மன்ற தீர்ப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமா அல்லது மற்ற மதத்தினருக்கும் பொறுந்துமா என்பதையும் தெரிந்து பதில் கூற வேண்டும்.  2017 ஜீலை 7ந் தேதி உச்ச நீதி மன்றம், 50 ஆண்டுகளுக்கு மேலாக கேரளாவின் மலங்காரா ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கும், ஜேகோபைட்சிரியன் சர்ச்சுக்கும் இருந்து வந்த  தீரா பிரச்சனையை ஒரு தீர்ப்பின் மூலம் திர்த்து வைத்தது.  ஆனால் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அல்படுத்த கேரள அரசாங்கம் மறுத்துவிட்டது,  இது மிகவும் உணர்ச்சி பூர்வமான விஷயம்.  எந்த தரப்பும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும், தீர்ப்பை அல்படுத்தினால் பலர் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் , சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என அபிடவிட் தாக்கல் செய்த பினராயி விஜயன், ஏன் சபரி மலை தீர்ப்புக்கு உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், மானங்கெட்ட தனமாக அபிடவிட் தாக்கல் செய்தார்.  இது இடதுசாரிகளின் அப்பட்டமான அயோக்கியதனமான செயல்பாடாகும்.

மக்கள் மனநிலைக்கு எதிரான கேரள அரசின் இந்த போக்கு கம்யூனிஸ்டுகளின் சுயரூபத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.

 -    ஈரோடு சரவணன்.