மீண்டும் ஸ்டெர்லைட்

மீண்டும் ஸ்டெர்லைட்

'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டங்களினால் தமிழக அரசு அந்த ஆலையை மூடியது. 'ஸ்டெர்லைட்' ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் ஆலையை மூடியது தவறு என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து விசாரிக்க தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில்,"தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்றும். ஒரு வாரத்தில் தமிழக அரசு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.