'முதலிடம்' - நான்காவது முறையாக

'முதலிடம்' - நான்காவது முறையாக

உடல் உறுப்பு தானத்தில் நான்காவது முறையாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது தமிழகம். மத்திய சுகாதாரத்துறை சார்பில் 9வது உடல் உறுப்பு தான விழா இன்று தில்லியில் நடைபெற்றது. அதில் உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் முதல் இடம் பெற்றதற்கான விருதினை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார் மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோர் வழங்கினர். தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பெற்றுக்கொண்டார.