முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி.

முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி.

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 288 ரன்கள் எடுத்திருந்தது.  பின்னர், 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 129 பந்துகளில் 133 ரன்கள் குவித்தும் பயனில்லாமல் போனது. தோனி 51 ரன்கள் எடுத்தார். முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பாட்டிங்கை தேர்வு செய்தது.