முதல் நாள்  முதல் கேஸ் பர்ஸ் அபேஸ்

முதல் நாள் முதல் கேஸ் பர்ஸ் அபேஸ்

கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.  விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே விமான நிலைய திறப்பு விழாவிற்கு வந்த ஒருவர் பர்ஸ் காணவில்லை என்று விமான நிலைய போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.  அந்த பர்ஸில் ஏ.டி.எம்  கார்டு உட்பட பல முக்கிய பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

விமான நிலையம் திறந்த முதல் நாளிலேயே முதல் கேஸ் வந்திருப்பதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் போலீஸார் விசாரணையை துவக்கியுள்ளார்கள்.