முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ப . சிதம்பரம் தொடுத்த முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.  I.N.X. மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் கைதாவதை தடுக்க தொடுத்த முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் இன்று  தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதன் மூலம் அமலாக்கத்துறை அவரை கைது செய்வதிலிருந்த தடை நீங்கியது.  தற்போது அவரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றது. இன்று அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது