முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ள இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய விளக்கம் இங்கே.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ள இந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய விளக்கம் இங்கே.

பீட்டர் மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ் மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டு மொரிஷீயஸில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் 305 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடு வந்துள்ளது. இந்தத் தொகை ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகம். 

இதனை ஜனவரி 2008ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையும் வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தன. இதனை வருமான வரித்துறை அமலாக்குத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை 2010ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஐ.என்.எக்ஸ் மீது வழக்கு தொடர்ந்தது.

பல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் புதிய திருப்பமாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்டின் கம்ப்யூட்டரில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தனர். அதில் கிடைத்த முக்கிய தகவலாக சிபிஐ கூறுவது கார்த்திக் சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு இந்த அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் பொருட்டு குறிப்பிட்டத் தொகையை பெற்றுள்ளதாகக் சிபிஐ கூறுகிறது. 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம்தான் நாட்டின் நிதியமைச்சர் என்பதால் அவர்மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்திக் சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு உதவியாதாகவும் அதற்கு உடந்தையாக ப.சிதம்பரம் துணை போனதாகவும் தற்போது குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது. 

இதனால் சென்ற ஆண்டு பண பரிமாற்ற மோசடியின் பெயரில் கார்த்திக் சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா இயக்குனர்கள், இந்திராணி முகர்ஜி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது