முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய மூவர்குழு சத்தமில்லாமல் பெங்களூரு வந்த ராஜபக்சே வாக்குமூலம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய மூவர்குழு சத்தமில்லாமல் பெங்களூரு வந்த ராஜபக்சே வாக்குமூலம்

ந்திய இலங்கை வரலாற்றில், இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் 8,௦௦௦ பேர்களைக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் போர் ஒரு கரும்புள்ளி! தமிழர் இனம், மானம், மனிதாபிமானம் அத்தனைக்கும் விடப்பட்ட சவால் அது!

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முதல் சிறு சிறு தமிழ் தேசியவாதிகள் வரை தமிழர் மீதான தங்கள் "பற்றை"க் காண்பிக்க முழங்கும் வீர உரைகள் முள்ளிவாய்க்கால் பற்றியே இதுவரை இருந்து வருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நாயகன் அதாவது தமிழ் இனத்தின் வில்லன் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே, தமிழ்நாட்டுக்குள் ஏன் இந்தியாவிற்குள் எங்கே நுழைந்தாலும் கருப்புக்கொடி காட்டுவது, ஆர்ப்பரித்து எழுந்து தமிழகமே போர்க்கோலம் பூணுவது எல்லாம் நடைபெறுவது வழக்கம்!

ஆனால் கடந்த ம் தேதி பெங்களூரில் இந்து' பத்திரிகை ஏற்பாடு செய்த "2019ன் குழப்பம்" - "The Huddle 2019" என்ற கருத்தரங்கிற்கு வந்து துவக்கி வைத்து, இந்திய இலங்கை உறவு பற்றி பேசிவிட்டு, ௧௩ம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த சுவடே தெரியாமல் சென்றிருக்கிறார் ராஜபக்சே!

இதில் ஒரு சிறிய மாற்றம் " வந்த சுவடே தெரியாமல்" என்பதற்கு பதிலாக அவர் வந்ததை "சுவடே தெரியாமல் பார்த்துக் கொண்ட தமிழக ஊடகங்கள்" என மாற்றி வாசித்துக் கொள்ளுங்கள்.

ராஜபக்சே வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் தமிழக ஊடகங்கள் இருந்ததற்கு காரணம், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்து பத்திரிகை ராம் கூப்பாடு போட்டவர் கூட்டத்தைச் சேர்த்தவர் அல்லது அவர்கள் குடும்பத்துக்கு நெருங்கிய சொந்தக்காரர் என்ற உண்மையும் ஒரு காரணம்.

சரி... சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன். பெங்களூரு கருத்தரங்கில் இலங்கையில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சே பேசியவை வரலாற்று உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவை. தமிழ்நாட்டு அரசியலில் உள்ள "முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு யார் காரணம்? தமிழ்நாட்டில் அதை ஆதரித்தது யார்? இலங்கை தமிழ் இன வேரறுப்புக்கு காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் காரணமா? அதோடு கூட்டணியில் இருந்த திமுக தனக்கு ஒன்றுமே தெரியாததுபோல் மெளனம் காத்தது சரியா?"

அது மட்டுமன்றி அந்த கருப்பு நாளில் (௨௦௦௯ மே மாதம்) உண்ணாவிரதம் இருந்த கலைஞருக்கு இந்த படுகொலை தெரியாமல் போயிருக்கும் என்பது உண்மையா? அவர் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியாதா? என்கிற விவாதங்கள், ஒருவர் மீது மற்றவர் மாறி மாறி கூறிய குற்றச்சாட்டுகள் இவற்றிற்கெல்லாம் தெளிவான பதிவை ராஜபக்சே கூறியுள்ளார்.

"TROIKA" - "ட்ரோய்கா" - இது ஒரு ரஷ்ய வார்த்தை. அரசியலில் சர்வ அதிகாரம் படைத்த மூவர் என்பது அதன் அர்த்தம். நமது கணக்கிற்கு நாம் "மூவர் குழு" என வைத்துக் கொள்வோம்.

இந்த மூவர் குழுக்கள் ஒன்று இலங்கையில் இருந்தும், மற்றொன்று இந்தியாவில் இருந்தும் அமைக்கப்பட்டு அவர்களே இலங்கை இனப்படுகொலையைக் கையாண்டிருக்கிறார்கள். (என்பது இந்தியத் தரப்பிலும் நிகழ்த்தி இருக்கிறார்கள் அல்லது செய்திருக்கிறார்கள் என்பது இலங்கை தரப்பிலிருந்தும் சொல்லலாம்!)

இதை தனது பெங்களூரு உரையில் ராஜபக்சே சொல்லியிருக்கிறார். அவருடைய உரையிலிருந்து சில பகுதிகள் இதோ:

2008ம் ஆண்டு ஈழப்போரின் வது பகுதி மிகவும் கடுமையாக இருந்தது. அப்போது இந்திய தூதர் அலோக் பிரசாத் ஆலோசனையின் பேரில் இலங்கைத் தரப்பிலிருந்து மூவர் குழு நியமிக்கப்பட்டது.

1. பசில் ராஜபக்சே - ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும் சகோதரர்

. கோத்தபய ராஜபக்சே - பாதுகாப்பு செயலாளர்  மற்றும் சகோதரர்

. லலித் வீரதுங்கா - ஜனாதிபதியின் செயலாளர்

இந்த மூவரில் விசேஷம் என்னவென்றால் இருவர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர்கள்.

இந்தியாவின் தரப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்தக்குழு அடிக்கடி அதிகார பூர்வமாகவும், தனியாகவும் சந்தித்தது. இந்தியாவிடம் எல்டிடிஈ பயங்கரவாதம் பற்றிய உள்ளார்ந்த புரிதல் இருந்தது. இதுவே போரில் நாங்கள் வெற்றியடைய உதவியது.

மகிந்த ராஜபக்சேவின் இந்த பேச்சு நாம் மேலே எழுப்பிய பல சந்தேகங்கள், கேள்விகளுக்கு உரிய விடையைத் தந்தது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை.

தமிழ்நாட்டில் அப்போது மத்தியில் ஆண்ட கட்சி காங்கிரசும், அதோடு கூட்டணியில் இடம் பெற்று மந்திரிகளைப் பெற்ற தி.மு..வும் இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடத்திய மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் எவ்வளவு "நாடகமானது" என்பதை இப்போது நினைக்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது.

இந்த மூவர் குழுவில் இருந்த லலித் வீரதுங்கா சொல்கிறார்: "இந்த மூவர் குழு இந்தியாவைவிட இலங்கைக்கு மிகப் பயனுள்ளதாக இருந்தது. இலங்கை அரசும் ராணுவமும் எல்டிடிஈக்கு எதிராக என்ன செய்கிறது என்கிற முழு தகவல்களையும் இந்திய அரசு அறிந்திருந்தது."

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருடைய இந்த ஒப்புதம் வாக்குமூலம் அப்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் ஒப்புதலோடுதான் இலங்கை படுகொலைகள் நடந்தன என்பதற்கான ஆதாரங்களாகவே நாம் பார்க்க முடிகிறது.

இதோடு லலித் வீரதுங்கா நிறுத்தவில்லை. "ஒவ்வொரு பிரச்சினைக்கும் இருபக்க தலைவர் களோடு தொலைபேசியில் பேசி ஒப்புதல் பெற்றே தீர்வு காணப்பட்டது. "

இதைவிட முழுதான "தமிழ் இனப்படுகொலைக் கான" மரண வாக்குமூலமும் இந்த மரணங்களை இந்தியாவிலிருந்து நிகழ்த்த காரணமான பங்காளிகள் திமுகவும் காங்கிரசும் என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும் என்பதுதான் நமக்கும் புரியவில்லை.

இதெல்லாம் ௨௦௦௯ம் ஆண்டும் அதற்கு முந்தைய வரலாறுமாகும். இதற்கு முழுமுதல் காரணகர்த்தர்களான திமுகவும் காங்கிரசும் எப்படி யெல்லாம் நாடகமாடினார்கள் என்பதை அன்றைக்கு நாடு பார்த்தது.

ஒரு கட்டத்தில் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து இதைத் தடுக்க நினைத்ததும், அவருக்குத் தெரியாமல் காங்கிரஸ இந்தப் படுகொலைக்கு ஆதரவு தெரிவித்து நிகழ்த்தியதாகவும் அதனால் ஆட்சி நிறைவுறும் இறுதி நாட்களில் "இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து" காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியே வருவதாக அறிவித்ததும் சிவாஜிகணேசனை விஞ்சிய நடிப்பு என்பது இப்போது புரிகிறதல்லவா?

இதெல்லாம் சரித்திரம்... இப்போது பேசி என்ன பயன் என்போருக்கு, ராஜபக்சே இந்தியா வரும்போதெல்லாம் அவர் இருக்கும் ஊரைத் தேடிப்போய் கருப்புக்கொடி காட்டும் மதிமுக தலைவர் வைகோ ஏன் பெங்களூருக்கு செல்லவில்லை?

ராஜபக்சேவை அரசு ரீதியாக மோடி சந்தித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் பெங்களூரு வந்த ராஜபக்சேவை எதிர்த்து கருப்புக்கொடி காட்டவில்லை? கர்நாடக மாநிலத்தில் திமுக இல்லையா...? ஆக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக நிகழ்த்திய நாடகம் இப்போது பெங்களூரு வந்தபோது மட்டும் தொடர்வது ஏன்?

இதில் காரணம் இல்லாமல் இல்லை. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் திமுகவின் அரசியல் ஆலோசகர் இந்து பத்திரிகை ராம். பிப்ரவரி ௧௦, ௧௧ இரண்டு நாட்கள் ஆங்கில இந்து நாளிதழில் மட்டும் ராஜபக்சேவின் முழுபேச்சு வெளிவந்தது. ஸ்டாலின் அதை ஏன் படிக்கவில்லையா...? ரபேல் பற்றி இன்று எழுதிய பாதி உண்மை; மீதி பொய்யைப் படிக்க முடிந்த ஸ்டாலினால் இதைப்படித்து ஏன் ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?

ராஜபக்சே கூறியவைகள் பொய் என ஏன் மறுக்கவில்லை? 'முரசொலி' ஏன் முடங்கிக் கிடந்தது? தமிழ்நாட்டு ஊடகங்கள் யார் ஆணைக்குக் கட்டுப்பட்டு ராஜபக்சேவின் "வாக்கு மூலத்தை" இருட்டடிப்பு செய்தன என்பது இப்போது தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிகிறதா...?

மேலே சொன்ன உண்மைகளோடு மோடி அரசு ராஜபக்சேவை எப்படி கடுமையாக எதிர்த்தது என்பது மட்டுமல்ல, அந்த அரசை தூக்கி எறிந்ததும் மோடிதான் என்பதை ராஜபக்சே ஒப்புக்கொண்டு பேசியிருப்பதும் மற்றொரு அதிர்ச்சியாகும்.

2015ல் இலங்கை ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா காரணமானது தகவல் தொடர்பில் இருந்த இடைவெளியேயாகும்.

ஆக ராஜபக்சே ஆட்சியைத் தூக்கி அடித்ததில் மோடியின் பங்கு இருக்கிற போது "மோடி கோபேக்" எனச் சொல்ல ராஜபக்சேவை வாழ்த்தி வணங்கிய கும்பலுக்கு என்ன உரிமை இருக்கிறது என கேட்கத் தோன்றுகிறதல்லவா?

"முந்தைய அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு இருந்த இணக்கம் எங்களுக்கு இப்போதைய அரசான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இல்லை." இதுவும் ராஜபக்சேவின் வாக்குமூலம்தான்.

ஆக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஒரு வியாபாரமாக செய்யப்பட்டிருக்கிறது என்பதும், ஒரு பக்கம் தமிழர்களைக் கொன்று குவிக்க ஆதரவு தெரிவித்துவிட்டு மறுபக்கம் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் நடத்திய துரோகமும் தமிழ்நாட்டில் மதிமுக கூட்டணி கட்சிகளால் நடத்தப்பட்டிருக்கிறது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ராஜபக்சேவின் பெங்களூரு உரை தமிழ்நாட்டிலுள்ள போலி தமிழீழ விடுதலை ஆதரவாளர், தமிழ் தேசியவாதிகள் போன்ற மரண வியாபாரிகளை அடையாளம் காட்டி இருக்கிறது.

- SR சேகர்