மூச்சுக்கு 300 தடவை சாதி சாதி என்று இன்றைய தலைமுறைக்கு சாதியை நினைவுபடுத்தும் பா ரஞ்சித்

மூச்சுக்கு 300 தடவை சாதி சாதி என்று இன்றைய தலைமுறைக்கு சாதியை நினைவுபடுத்தும் பா ரஞ்சித்

மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜாதி குறித்தும் அவரது ஆட்சிக் காலம் குறித்தும் கடுமையாக விமர்சித்த திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் கும்பகோணம் அருகே மேடை போட்டு தன்னை ஜாதி வெறியன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். 


அட்டக்கத்தி மெட்ராஸ் ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறியப்பட்டவர் பா ரஞ்சித் ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியதன் மூலம் படம் தோல்வியைத் தழுவினாலும் ரஞ்சித் பிரபலமானார். அதன் பின்னர் ஒவ்வொரு மேடையிலும் ஜாதி ஒழிப்புக்காக குரல் கொடுப்பதாக கூறி அவ்வப்போது ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது ரஞ்சித்தின் வழக்கம். அந்த வகையில் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் கடை வீதியில் நடந்த எழுத்தாளர் நீல புலிகள் அமைப்பின் நிறுவனர் உமர் பரூக் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழ் மற்றும் தமிழர் கோஷங்களுக்கு எதிராக பேசிய பா ரஞ்சித் தன்னை ஒரு ஜாதி வெறியன் என்று அடையாளம் காண்பதில் தனக்கு பெருமை என்று கூறினார். 


கடவுளாக வணங்கப்படும் மாட்டை சாப்பிடுவது கடவுளையே சாப்பிடுபவன் என்றும் பெருமை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜாதி குறித்து பேசிய பா ரஞ்சித் அவரது ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று கடுமையாக விமர்சித்தார். அத்தோடு விடாமல் ராஜராஜ சோழன் ஆட்சியில் நானூறு பெண்கள் விலைமாதர்கள் மாற்றப்பட்டதாகவும் சாடினார். 


இயக்குனர் பா ரஞ்சித் என்கிற பேச்சு குறித்து உலக பிரிவு காவலர்கள் அளித்த புகாரின் பேரில் பா ரஞ்சித் மீது இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 153 153A ஆகிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இயக்குனர் ரஞ்சித்தின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.