மூத்த மருத்துவர்கள் தங்கள் சான்றுகளை புதுப்பிக்க வேண்டும்

மூத்த மருத்துவர்கள் தங்கள் சான்றுகளை புதுப்பிக்க வேண்டும்

70 வயதிற்கு மேல் உள்ள மருத்துவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள்  தகுந்த சான்றுகளை அளித்து தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.  அப்படி புதுப்பிக்க தவறினால், அவர்கள் செயல்படாதவர்களாகவும், அணுக முடியாதவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும், அவர்களது பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் உள்ளபடி மாநிலத்தில்  சுமார் 15,000 மூத்த மருத்துவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் தங்கள் பதிவு சான்றிதழ், ஆதார் கார்ட், தாங்கள் சேவை செய்யும் விவரம் ஆகியவற்றை கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தங்கள் பதிவுகளை புதுப்பிக்க தவறும் மூத்த  மருத்துவர்கள் பிப்ரவரி 2019 முதல் மருத்துவர்களாக சேவை செய்ய முடியாது என்றும்  தமிழ்நாட்டில் சுமார் 1.4 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் எத்தனை பேர் தற்போது செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவே இந்த கணக்கெடுப்பு என்றும் கவுன்சில் கூறியுள்ளது.