"மூன்றுக்கு $80,000 பரிசு, நான்குக்கு வருமான வரி முழு விலக்கு"

"மூன்றுக்கு $80,000 பரிசு, நான்குக்கு வருமான வரி முழு விலக்கு"

ஹங்கேரி, 11.02.2019

ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஹங்கேரி மக்களை மட்டுமில்லாமல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வலது சாரி சிந்தனையுள்ள ஹங்கேரி நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, ஹங்கேரி நாட்டில் சொந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் தொகை குறைந்து வருவதால் ஹங்கேரி மக்களிடம் அந்நாட்டின் பிரதமர் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

நேற்றைய சந்திப்பின் போது பிரதமர் விக்டர் ஆர்பன் பேசியதாவது:

ஹங்கேரி நாடு மண்ணின் மைந்தர்களையே அதிகம் விரும்புகிறது, வெளிநாட்டில் இருந்து வரும் முஸ்லீம்களை அல்ல. எனவே, ஹங்கேரி மக்களே நீங்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதிக குழந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு பல சலுகைகள் உண்டு. அதன்படி, நீங்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் உள்ளங்களுக்கு 80,000 டாலருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் 80,000 டாலர் அரசு சார்பாக வழங்கப்படும். நான்கு குழந்தைகள் பெற்றால் முழு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், நாட்டின் மக்களுக்காக பல உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். 

தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள பல நாடுகளில் சொந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருவதும், வெளிநாட்டில் இருந்து அகதிகளாக குறிப்பாக முஸ்லீம் நாடுகளிலிருந்து பல லட்சம் மக்கள் ஐரோப்பா முழுவதும் குடியேறுவதும் அதிகம் ஆகி விட்டநிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.