மெகா கூட்டணியிலிருந்து ஆர்ஜேடி விலகியது - ஜார்க்கண்ட்

மெகா கூட்டணியிலிருந்து ஆர்ஜேடி விலகியது - ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள14 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடை பெறவுள்ளது. இந்நிலையில் அங்கு காங்கிரஸ் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (ஜேவிஎம்), ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் 7 இடங்களிலும், ஜேஎம்எம் 4 இடங்களிலும், ஜேவிஎம் 2 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலும் போட்டி யிடும் என அறிவிக்கப்பட்டது.

ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதால் ஆர்ஜேடி தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். 2 தொகுதிகள் தராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.