மெக்சிகோ நாட்டில் எரிபொருள் குழாய் விபத்து

மெக்சிகோ நாட்டில் எரிபொருள் குழாய் விபத்து

மெக்சிகோ நாட்டில் எரிபொருள் குழாய் வெடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர், 71 பேர் காயமடைந்தனர்.  எரிபொருள்  குழாயிலிருந்து திருடர்கள் சட்டத்திற்கு புறம்பாக எரிபொருள்  எடுக்க முயன்ற போது அந்த குழாய் வெடித்தது. விபத்து ஏற்பட்ட போது நூற்றுக்கணக்கானோர் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தனர். இதனால்,  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஒப்ரடார் எரிபொருள் திருட்டை தடுக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.