மேக்கேதாட்டு அணை விவகாரமும் – திராவிட இயக்கங்களின் அரசியல் அவதாரமும்

மேக்கேதாட்டு அணை விவகாரமும் – திராவிட இயக்கங்களின் அரசியல் அவதாரமும்

ர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக விரிவான அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்பதை மாற்றி, அணைக் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது போல் தி.மு.க. உள்ளிட்ட பிரிவினைவாத கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றப் பத்திரிக்கையை வாசிக்கிறார்கள்.  இது சம்பந்தமாக  டிசம்பர்  மாதம் 3ம் தேதி  திருச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்பாட்டத்தில் உண்மையை எடுத்து கூறுவதற்கு பதிலாக, தேர்தல் காலங்களில் பொய் பிரச்சாரம் செய்வது போல் மத்திய அரசின் மீது, குறிப்பாக மோடி மீது வசைமாறி பொழிந்துள்ளார்கள்.

      கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.  கார்நாடக நீர்வளத் துறை அமைச்சாராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே. சிவக்குமார்.  இவர்  ஏற்கனவே வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.  வரைவு திட்ட அறிக்கையை தயாரித்த போது, ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் கட்சி.   இன்று பிரதமர் மீது குற்றம் சுமத்தும் இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

      2015 மார்சு மாதம் கார்நாட சட்ட மன்றத்தின் பட்ஜட் கூட்டத் தொடரில், முதல்வராக இருந்த சித்தரமையா சட்ட மன்றத்தில், மேக்கேதாட்டு அணை பற்றி விரிவான அறிக்கை தயாரிக்க ரூ25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு்ளளது.   காவிரியில் வரும் உபரி நீரை தேக்கிக் கொள்ள இந்த அணை கட்டப்படுகிறது.  இதில் தமிழகம் தடுக்க எந்த உரிமையும் கிடையாது.  தமிழகத்தில் இதை அரசியலாக்குகிறார்கள் என்றார்.  இரண்டாவது 2015 ஏப்ரல் மாதம் தே.மு.தி.க. கட்சியின்  தலைவர் விஜயகாந்த் , கருணாநிதி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் சந்தித்து மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.  அவருக்கு உதவுவதாக கூறியவர்கள் ஏன் ஒன்று சேர்ந்து தடுப்பதற்குறிய நடவடிக்கையை எடுக்கவில்லை?  மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது பிரதமர் மீது குற்றம் சுமத்துவது அரசியல் தவிர, தமிழக விவாசயிகளின் நலன் என்பது  மக்களை முட்டாளாக்கும் விஷயமாகும்.

      காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் டெல்லியில் காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியளார்களுக்கு கொடுத்த பேட்டியில், மேக்கேதாட்டு அணை  பற்றி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க  கர்நாடக அரசுக்கு , மத்திய நீர் ஆணையம் சில நிபந்தனைகளுடன் தான் அனுமதி அளித்துள்ளது.   ஆணையம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆலோசனைக் குழுவின் மூலம் திட்ட அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,  திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி அளித்திருப்பது, அணை கட்டுவதற்கான அனுமதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தெளிவாக கூறிய பின்னரும் கூட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திருச்சியில்  மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என பேசியது, பொய் என்பதும், பொய்யை பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

         தி.மு.க.வின் தலைவர்கள் உண்மையை தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுவார்கள்.  1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு நடத்திய திருவிளையாடல்களை மறந்த விட்டதாக கருதி ஸ்டாலின் பேசுகிறார்.  அடைந்தால் திராவிடநாடு இல்லையோல் சுடுகாடு, 1962-ல் பிரிவினை தடுப்பு சட்டம் கொண்டு வந்தவுடனே, திராவிடநாடு கோரிக்கை ஒத்திவைப்பு,  மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கோஷம், பல முறை மத்தியில் கூட்டணியிலிருந்தும்  மத்திய அரசை வலியுறுத்தவில்லை.  ஆட்டுக்கு தாடி, ஆட்சிக்கு கவர்னரா என்றும்,  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கவர்னர் பதவியை ஒழிப்போம் என தெருவுக்கு தெரு முழக்கமிட்டவர்கள் எங்கே என தேட வேண்டும்.  ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 1க்கு மூன்று படி அரிசி கொடுப்பபோம், உடனடியாக ரூபாய் 1க்கு 1படி நிச்சயம் என்றவர்கள் ஆறு மாதத்திற்கு பின் என்னவாயிற்று என்று எவருக்கும் தெரியாது.  இப்படி பட்டவர்கள் தான் மத்திய அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என கேள்வி கேட்கிறார்கள்.

      திருச்சியில் சங்கநாதம் முழங்கியவர்கள் மேக்கேதாட்டு அணைப் பற்றியும், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் பேசாமல், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போல் பேசியுள்ளார்கள்.   கா்நாடகத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர், மேக்கேதாட்டு அணையை பற்றி பேசாமல், பா.ஜ.க.விற்கு வட மாநிலங்களில் எற்பட்ட சரிவை சரிகட்ட தென் மாநிலங்களில் உள்ள 130 தொகுதிகளை குறி வைத்து செயல்படுகிறது, இதில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற இயலாது என்றார்.  திட்ட அறிக்கைக்கு மூ25 கோடி நிதி ஒதுக்கியது காங்கிரஸ் கட்சி,  தமிழக அரசியல் கட்சிகளை கண்டனம் செய்தவர் சித்தராமையா என்பதை மறந்து விட்டு, பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றால், ஏன் போராட வேண்டும்.  பல கட்சிகளை சந்தித்தவரை மாநில தலைவராக வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தனது கட்சி தமிழகத்திற்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு பா.ஜ.க.வின் மீது பழியை போடுகிறார்.  

      தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகின்றன என்கிறார் திருமாவளவன்.  தி.மு.க. அணியை பலவீனப்படுத்த பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். செயல்பட தேவையில்லை.  கூட்டணியிருக்கின்ற வை.கோவும், கம்யூனிஸ்ட்களும் போதுமான வகையில் பலவீனப்படுத்துவார்கள்.  மேக்கேதாட்டு அணைக்கு திட்ட அறிக்கையை தயார் செய்த காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க யாருக்கும் தைரியம் கிடையாது.  மோடி மீது பாயும் இந்த காகித புலிகள், காங்கிரஸ் மீது ஏன் பாயவில்லை?  பலன் இருக்காது என்பதும், இவர்களை அடிமைகளாகவே வைத்திருந்தார்கள் என்பதும் பழைய வரலாறு.  மோடியை கீழே இறக்க மகா கூட்டணியை உருவாக்கிய ஸ்டாலினிடம் ராகுல் காந்தியிடம் கூறி கார்நாடக அரசை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க கூட இவர்கள் முன் வரமாட்டார்கள்.  ஏன் என்றால் 2019-ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடமாவது கொடுக்க மாட்டார்களா என இவு காத்த கிளியாக காத்திருக்கும் இந்த வாய் சொல் வீரர்கள், எதை மீட்டார்கள் என்பது உலகறிந்த விஷயம்.

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேககேதாட்டு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என கூறும் அதிபுத்திசாலி முத்தரசன்.  1972லிருந்து காவேரி பிரச்சனையை தீர்க்க முயலாத காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரச்சினை தீர்ந்து விடுமா?  உச்ச நீதி மன்றம் பல முறை உத்திரவிட்டும், உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கேட்டு விடுவார்களா என்பதையும் சிந்திக்காமல் வாய்க்கு வந்தப்படி பேசுவது காம்ரேட்டுகளின் பாணியாகும்.   வை.கோ. மோடி தமிழ்நாட்டுக்குள் நுழைய விடமாட்டோம் என வீர வசனம் பேசுகிறார்.   மேக்கேதாட்டு அணை விவகாரத்தின் மையம் கர்நாடக காங்கிரஸ் கட்சி,  ராகுல் காந்தியை கேட்க துப்புக் கெட்ட இந்த ஜீவன்கள் மோடியை தமிழகத்துக்குள் விடமாட்டோம் என்கிறார்கள்.   இரண்டு லட்சத்திற்கு அதிகமான தமிழர்களை இலங்கை கொலை செய்ய உடந்தையாக இருந்த காங்கிரஸ் கட்சியுடனும்,  கருணாநிதியின் தி.முக.வுடனும் பதவி ஆசைக்கு ஆலாய் பறக்கும் வை.கோ. கூட்டு வைக்க பார்க்கிறார்.  அழையா விருந்தாளியாக இருந்துக் கொண்டு, பசப்பு வார்த்தைகள் மூலம் வாய் சவடால் விடும் வை.கோ.  பிரிவினைவாதிகளின் கைக் கூலியாக செயல்படுகிறார். 

      இறுதியாக தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி கொடுக்க வேண்டும் என வீர வசனம் பேசுபவரிடம் சில கேள்விகள், தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டம் மேககேதாட்டு அணை என்றால், இவரது தமக்கை திருமதி செல்வி, கர்நாடகத்தில் உள்ள தங்களது சொத்துகளை விற்று விட்டு தமிழகத்தில் குடி புகுவாரா அல்லது  கருணாநிதியின் மனச்சாட்சி முரசொலி மாறனின் மைந்தர்கள் கர்நாடகாவில் நடத்தும் தொலைக் காட்சிகளை நிறுத்தி விட்டு தமிழகத்தில் கோலோட்சி செய்ய முன் வருவார்களா என்பதைம் தெளிவுபடுத்த வேண்டும்.  வரி செலுத்த வேண்டாம் என ஸ்டாலின் கூற காரணம், தனது மகன் வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார் இறக்குமதி செய்தது போல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்.   தமிழகத்தின் நலன்களை அடகு வைத்தவர்கள் தி.மு.க.வினர்.  தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேவிடம் கைகுலுக்கியவர்கள்,  சிதம்பரம் கூறினார் என்பதற்காகவே பாதியில் உண்ணாவிரத்தை முடித்தக் கொண்டு, சோனியாவின் மீது நம்பிக்கை கொள்கிறேன் என கூறி, தமிழர்களை கொலை களத்திற்கு இட்டு சென்றவரின் தனையன் பேசுவது சரியானதா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  திருவாளர் ஸ்டாலினின் கவனத்திற்கு, 1962-ல் பிரிவினை கேட்டால் சிறை என சட்டம் வந்தவுடன், திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறோம் என தீர்மானம் போட்டவர்கள் மோடி மீது வசைபாடுகிறார்கள். 

      காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு சாதகமாக இருந்தவர் கருணாநிதி.  காவிரியின் குறுக்கே ஹேமாவதி அணையை கட்ட சம்மதம் தெரிவித்தவர்.  6.3.1970 ந் தேதி சட்ட மன்றத்தில், கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வில் முதல் சாவு மணி அடித்தவர்.  இன்றைக்கு மோடியை விமர்சனம் செய்பவர்கள் இதற்காக விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்களா என்பதையும் ஸ்டாலின் விளக்க வேண்டும். 

      கருணாநிதி விவசாயிகளுக்கு காவிரி பிரச்சினையில் செய்த மிகப் பெரிய துரோகம், 1998-ல் ஆகஸ்ட் 3ந் தேதி பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கருணாநிதி தலைமையில் சர்வ கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.   அதில் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்திரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் பிரதமர்  தலைமையிலான காவிரி ஆணையமே கர்நாடக அணைகளை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தும், அதனை கருணாநிதி நீக்கி விட்டார்.  இதற்கான காரணத்தை கூறும் போது, மத்திய அரசுக்கு வானளாவிய அதிகாரம் சேர்ந்து விடும் என்றார்.  ஆனால் உண்மையான காரணம், அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள கணக்கற்ற சொத்துக்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமே என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா என்பதையும் திருச்சி கூட்டத்தில் கூறியிருக்க வேண்டும்.

      மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக முயலுவதற்கு காரணம் திராவிட அரசியல் எப்படி பட்டது என்பது நன்கு தெரிந்தே நடக்கிறது.  ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்டாலின் எதுவும் செய்ய மாட்டார் என்ற தைரியத்தின் அடிப்படையில் சிவக்குமார் நடக்கிறார்.  காரணம்,முந்தைய அனுபவம்,  கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெட்டே தனது சுய சரிதையில், தான் ஆட்சியிலிருந்த போது, ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க காவிரியில் சம்பா பயிருக்கு தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தேன்.  ஆனால் தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்த காரணத்தால்,  மத்திய அரசிடம் கூறி, தண்ணீர் திறந்து விட முட்டுக் கட்டை போட்டவர் கருணாநிதி, ஏன் என்றால், தண்ணீர் திறந்து விட்டால், விவசாயிகளின் மத்தியில் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் கிடைத்துவிடும், தேர்தலை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக செயல்பட்டார் என குறிப்பிட்டுள்ளது உண்மையா என்பதை ஸ்டாலின் தெளிவாக்க வேண்டும்.  காவிரியில் கா்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக  தி.மு.க. மோடியை குறை கூறி அரசியல் ஆதாயம் அடைய பார்க்கிறது.  இந்த வாய் சொல் வீரர்கள் அட்டை கத்தி வீரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.   

-ஈரோடு சரவணன்